» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பக்கிள் ஓடையை 5 மீட்டர் அகலப்படுத்த நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

வியாழன் 16, அக்டோபர் 2025 9:01:09 AM (IST)



தூத்துக்குடி நகருக்குள் வரும் தண்ணீர் கடலுக்கு செல்ல முன்பு 3 வடிகால்கள் மட்டுமே இருந்தன. தற்போது 14 வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மேயர் தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து மேயர் பேசும் போது, மாநகராட்சி பகுதியில் மழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. மழைநீர் எங்கேயும் தேங்காமல் வழிந்தோடும் வகையில் பணிகள் செய்யப்பட்டு உள்ளன.

நகரின் பிரதான மழைநீர் வடிகாலான பக்கிள் ஓடை முழுவதும் 5 மீட்டர் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகருக்குள் வரும் தண்ணீர் கடலுக்கு செல்ல முன்பு 3 வடிகால்கள் மட்டுமே இருந்தன. தற்போது 14 வடிகால்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து வடிகால்களும் தூர்வாரி சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. மழைநீர் தேங்கினாலும் 2 முதல் 3 மணி நேரத்தில் வடிந்துவிடும். 

அதுபோல பாதாள சாக்கடை திட்டத்தின் வழியாகவும் மழைநீர் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 28 எம்எல்டி கழிவுநீரை வெளியேற்றும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

முகாமில் உதவி ஆணையர் பாலமுருகன், நகர்நல அலுவலர் சரோஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

பெ.ராஜேஷ் செல்வரதி--தொல்லியல் ஆர்வலர்-தூத்துக்குடிOct 16, 2025 - 09:41:13 AM | Posted IP 104.2*****

வந்த தண்ணீர் வடிய வைத்து பின்னர் நிவாரண நிதி தருவதை விட, வடக்கே ஓடிய பழைய மலட்டாறு வழித்தடத்தினை மீட்டெடுத்திட மீளும் நம் தூத்துக்குடி தொடர் வெள்ளத்தில் இருந்து அய்யா....இது தொடர்பாக பலமுறை அறிவியல் சாத்தியக்கூறுகள் அடிப்படையிலான கோரிக்கைகள் மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை வசம் சமர்ப்பிக்க பட்டுள்ளது அய்யா.... கவனத்தில் கொள்ளவும் அய்யா....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory