» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி - சென்னை விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:46:08 AM (IST)
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், வெளியூர்களில் வேலை செய்பவர்க்ள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், விமானங்களின் பயண டிக்கெட் கட்டணங்கள் பல மடங்காக உயர்ந்துள்ளன. அதன்படி, சென்னை முதல் மதுரை வரை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,129 ஆக இருந்து வந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.17,683 வரை அதிகரித்துள்ளது. அதே போல், சென்னை முதல் திருச்சி வரை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608 ஆக இருந்த நிலையில், இன்றைய கட்டணம் ரூ.15,233 வரை உயர்ந்துள்ளது.
இதைப் போல் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கான விமான கட்டணம் சாதாரண நாட்களை விட இன்று பல மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னை-கோவை சாதாரண நாள் கட்டணம் ரூ.4,351 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.17,158 வரை உயர்ந்துள்ளது.
சென்னை-தூத்துக்குடி சாதாரண நாள் கட்டணம் ரூ.3,608 அக இருந்தது, இன்றைய நாள் கட்டணம் ரூ.17,053 வரை உயர்ந்துள்ளது. சென்னை-டெல்லி சாதாரண நாள் கட்டணம் ரூ.5,933 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.30,414 வரை உயர்ந்துள்ளது.
சென்னை-மும்பை சாதாரண நாள் கட்டணம் ரூ.3,356 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.21,960 வரை அதிகரித்துள்ளது. சென்னை-கொல்கத்தா சாதாரண நாள் கட்டணம் ரூ.5,293 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.22,169 வரை அதிகரித்துள்ளது.
சென்னை-ஐதராபாத் சாதாரண நாள் கட்டணம் ரூ.2,926 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.15,309 வரை உயர்ந்துள்ளது, சென்னை-கவுகாத்தி சாதாரண நாள் கட்டணம் ரூ.6,499 ஆக இருந்தது, இன்றைய கட்டணம் ரூ.21,639 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குற்றால அருவிகளில் 2 ஆவது நாளாக வெள்ளபெருக்கு : சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
வெள்ளி 17, அக்டோபர் 2025 11:00:44 AM (IST)

பாளையங்கோட்டை சிறையில் போக்சோ கைதி தற்கொலை விவகாரம்: டி.ஐ.ஜி. விசாரணை
வியாழன் 16, அக்டோபர் 2025 7:52:58 PM (IST)

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் பனை விதைகளை நடவு செய்யும் பணி துவக்கம்!
புதன் 15, அக்டோபர் 2025 4:52:08 PM (IST)

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் இருவர் கைது
புதன் 15, அக்டோபர் 2025 12:53:23 PM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

பெண்ணிடம் நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை : திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 11:15:52 AM (IST)

இது தான்Oct 17, 2025 - 01:57:27 PM | Posted IP 104.2*****