» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்கள் கைவரிசை

திங்கள் 10, நவம்பர் 2025 10:12:41 AM (IST)

நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். தொழிலாளி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (40). இவர் நேற்று முன்தினம் மாலையில் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுவிட்டார்களாம்.

இதுகுறித்து முத்துலட்சுமி, நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து

ஆண்ட பரம்பரைNov 10, 2025 - 06:35:03 PM | Posted IP 172.7*****

நாங்க தான் ஆண்ட பரம்பரை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory