» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 6பேர் உயிரிழப்பு - பலர் படுகாயம்!
திங்கள் 24, நவம்பர் 2025 11:43:16 AM (IST)

தென்காசி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
தென்காசியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் தென்காசியில் இருந்து கடையநல்லூர் நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்தும் கடையநல்லூரில் இருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு பஸ்களும் பலத்த சேதமடைந்தது.
பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளின் 5 பெண்கள் உட்பட 6பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த தென்காசி எஸ் பி அரவிந்த் மற்றும் எலத்தூர் போலீசார் சம்பவ இடத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!
திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)

தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்தி மன வேதனை அளிக்கிறது: விஜய் இரங்கல்
திங்கள் 24, நவம்பர் 2025 4:05:34 PM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
திங்கள் 24, நவம்பர் 2025 3:53:47 PM (IST)

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் : மாநில பேரிடர் மீட்பு குழு முகாம்!
திங்கள் 24, நவம்பர் 2025 10:57:15 AM (IST)

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)

தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் பலி: 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம்!
சனி 22, நவம்பர் 2025 12:46:58 PM (IST)




