» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

திங்கள் 24, நவம்பர் 2025 3:53:47 PM (IST)

தென்காசி அருகே பேருந்துகள் மோதிய விபத்தில் 6பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று(திங்கள்) காலை 11 மணியளவில் 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்ற பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் ஒன்றன் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்து பற்றி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், "தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன். உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன்.

விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்" என்று பதிவிட்டுள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory