» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பங்குனி உத்திர விடுமுறை: இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:19:35 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் இசக்கி முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநில இணை அமைப்பாளர் கே.கே. பொன்னையா, நெல்லை கோட்டச் செயலாளர் பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டப் பொதுச் செயலாளர்கள் நாராயண ராஜ், சரவணகுமார் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ வழிபாடுகள் அதிகளவில் நடைபெறுவதால், அண்டை மாவட்டமான நெல்லையைப் போலவே இங்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும். பல ஆண்டுகளாகப் பணிகள் நடைபெற்று வரும் பழமை வாய்ந்த ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டே நடத்தி முடிக்க வேண்டும். பீச் ரோடு பகுதியில் உரிய அனுமதியின்றி புதிய வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும், பக்கிள் ஓடை முதல் மூன்றாம் மைல் வரையிலான சிதிலமடைந்த சாலைகளைப் புதுப்பிக்கவும், 'தூய்மை பாரதம்' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகளை முறையாகப் பராமரிக்கப் பணியாளர்களை நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. மீனவர்களுக்கான மானிய டீசல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும், இரவு நேரங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவர்களின் வாகன உரிமத்தை ரத்து செய்யவும் இக்கூட்டத்தின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிப்.14ல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, பிப்ரவரி 2026 5:21:45 PM (IST)

சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சரிடம் தென்காசி எம்.பி. கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:02:53 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 9, பிப்ரவரி 2026 4:18:01 PM (IST)

மகாசிவராத்திரி விழா: பஞ்சபூத திருத்தலங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
திங்கள் 9, பிப்ரவரி 2026 10:24:45 AM (IST)

கல்லிடைக்குறிச்சி அரபிக் கல்லூரி முதல்வருக்கு பாராட்டு விழா!
திங்கள் 9, பிப்ரவரி 2026 7:39:59 AM (IST)


balaFeb 13, 2026 - 09:15:26 AM | Posted IP 172.7*****