» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி

வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:32:02 AM (IST)



திராவிட மாடல் ஆட்சி தொடரும், மகளிர் உரிமைத் தொகை ரூ.2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். 

மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 பணத்துடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "முதல்வரின் அறிவிப்பு  மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உழைக்கும் மகளிருக்கான உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதிப்படி 2ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முறையீடு செய்யலாம். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று தெரிவித்தார்.  


மக்கள் கருத்து

விஜய் ரசிகன்Feb 13, 2026 - 12:30:43 PM | Posted IP 104.2*****

விஜய் வந்ததும் திமுகவுக்கு பயம் வந்து விட்டது, அதை மறைக்க பணம், நீங்க எவ்வளவு கொடுத்தாலும் எங்கள் ஒட்டு TVK க்கு தான்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory