» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 53.57 லட்சம் பறிமுதல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 5:54:17 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது முதல் இன்று வரை மொத்தம் ரூ. 53,57,080 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைச் செயல்படுத்தவும், முறையற்ற பணப்பரிமாற்றத்தைத் தடுக்கவும் மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் (கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மனாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர்) தலா 18 பறக்கும் படைகள் மற்றும் 18 நிலையான கண்காணிப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட மார்ச் 15-ஆம் தேதி முதல் இன்று (ஏப்ரல் 7, காலை 6:00 மணி) வரை, பறக்கும் படையினரின் சோதனையில் மொத்தம் ரூ. 53,57,080/- உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதற்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இதுவரை ரூ. 16,80,700/- கைப்பற்றப்பட்டுள்ளது; இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூ. 64,000/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக குளச்சல் தொகுதியில் ரூ. 14,42,050/- மற்றும் கிள்ளியூர் தொகுதியில் ரூ. 7,80,790/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் மற்ற தொகுதிகளான நாகர்கோவிலில் ரூ. 6,53,340/- மதிப்பிலான ரொக்கமும், கன்னியாகுமரி தொகுதியில் ரூ. 4,66,700/- மதிப்பிலான ரொக்கமும் சோதனையில் சிக்கியுள்ளன. பத்மனாபபுரம் தொகுதியில் இதுவரை ரூ. 3,33,500/- கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை விளவங்கோடு தொகுதியைத் தவிர மற்ற ஐந்து தொகுதிகளிலும் புதிய பறிமுதல் ஏதுமில்லை என மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ரூ. 50,000-க்கும் அதிகமான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும் போது உரிய வங்கி ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் அழகுமீனா அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை: நெல்லையில் விஜய் பிரச்சாரம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:46:25 PM (IST)

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:38:44 PM (IST)

போலீசாரைத் தாக்க முயன்றதாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு: எஸ்.ஐ., மண்டை உடைந்தது!
புதன் 8, ஏப்ரல் 2026 8:38:27 AM (IST)

எழும்பூர் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
புதன் 8, ஏப்ரல் 2026 8:23:51 AM (IST)

புழல் சிறையிலிருந்து தாக்கல்:ஹரி நாடார் மனு தள்ளுபடி!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 9:07:53 PM (IST)

நெல்லையில் விஜய் பிரசாரத்திற்கு 51 நிபந்தனைகள்: செங்கோட்டையன் பேட்டி
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 4:07:26 PM (IST)

