» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி தருவை மைதானத்தில் ரூ.4 கோடியில் மேம்பாட்டு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 4:15:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக ரூ.4 கோடி மதிப்பீட்டில் தருவை விளையாட்டரங்கத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மைதானத்தில் அமைந்துள்ள ஸ்குவாஷ் உள் விளையாட்டரங்கம், கூடைப்பந்து மைதானம், கால்பந்து மைதானம், கையுந்துப்பந்து மைதானம் மற்றும் நடைபயிற்சி பாதை ஆகியவற்றை ஆட்சியர் விஷு மகாஜன் பார்வையிட்டார்.
தொடர்ந்து, சமீபத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட நீச்சல்குளம் மற்றும் குளிரூட்டப்பட்ட நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டு மாணவர்களுக்கான விடுதி வசதிகள் குறித்தும், அங்குப் புதிதாக அமைய உள்ள கூடுதல் விளையாட்டு அரங்கப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயரத்தினராஜன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் கைது!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:41:43 AM (IST)

வகுப்பறையில் மாணவிக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியருக்குச் சாகும்வரை சிறை தண்டனை விதிப்பு!
செவ்வாய் 30, ஜூன் 2026 8:17:38 AM (IST)

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 29, ஜூன் 2026 4:06:11 PM (IST)

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)



Huubhutfxd,Jun 29, 2026 - 10:25:29 PM | Posted IP 104.2*****