» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளி மேல்முறையீடு செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம்!

செவ்வாய் 30, ஜூன் 2026 7:40:53 AM (IST)

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் ஒரு வாரம் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி ஒருவர் காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரைப் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி காவல் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தர்ம முனீஸ்வரன் தரப்பு வழக்கறிஞர், மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யக் கூடுதலாக நான்கு வாரங்கள் அவகாசம் கோரினார். இதற்கு மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தண்டனை பெற்ற தர்ம முனீஸ்வரன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

naan thaanJun 30, 2026 - 02:04:59 PM | Posted IP 172.7*****

தர்ம முனீஸ்வரன் தரப்பு வழக்கறிஞர்... chi.... koochame illa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory