» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இப்போது தேர்தல் வந்தாலும் விஜய் 180 இடங்களில் ஜெயிப்பார்: வைகோ பேட்டி!
புதன் 8, ஜூலை 2026 4:21:22 PM (IST)
தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் 180-க்கும் மேற்பட்ட இடங்களை விஜய் ஜெயித்துக் காட்டுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு விளைவிக்கும் சீமை கருவேல மரங்களைத் தமிழ்நாட்டில் இருந்து வேரோடு அகற்றுவதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நீண்ட காலமாகத் தீவிர சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, களப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தை வைகோ கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஸ்டெர்லைட் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை பிரச்சனை, சீமை கருவேல மரங்கள் அகற்றம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்காக 20 ஆண்டுகாலமாகப் போராடி வருகிறேன். முல்லை பெரியாறு அணையை உடைக்கக் கேரளா அரசு தீவிரமாக இருந்தபோது, அதை எதிர்த்து நடைபயணம், மறியல் எனப் போராட்டங்களை நடத்தினோம்.
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்தபோது, அதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுத் தடை வாங்கப்பட்டது. மேகதாது அணைப் பிரச்சனைக்கு எதிராகவும் கட்சிப் பாகுபாடின்றிப் போராடினோம். தமிழக அரசு சீமை கருவேல மரங்களை அகற்றுவதைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய வைகோ, "பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்பது தொடக்க காலக் கோரிக்கை. ஆனால், நிதி நெருக்கடிக்கு இடையே அதை எப்படிச் செயல்படுத்த முடியும்? கல்வி நிறுவனங்கள் தொடங்கக் கூடுதல் கட்டணம் கேட்கப்படுகிறது. தமிழகத்தில் தலைவிரித்து ஆடிய ஊழல் என்னும் கொடிய நோயைத் தவெக தலைவர் ஜோசப் விஜய் ஒழித்துள்ளார்.
தற்போதைய சூழலில் தவெக தலைமையிலான கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. செந்தில் பாலாஜி அண்ணா திமுகவில் இருந்தபோது எவ்வளவு ஊழல் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது மீண்டும் தேர்தல் நடந்தால் கூட விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பதே தற்போதைய கள நிலவரம்” என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
முன்னாள் தொண்டன்Jul 8, 2026 - 06:15:33 PM | Posted IP 162.1*****
அந்த காசுக்காக வாடகை வாய் சிகரெட் கம்பெனி ஓனர் தெலுங்கு கோபாலை அடித்து துவைத்து சும்மா இருக்க சொல்லுங்கடா.
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)



இந்த `Jul 9, 2026 - 10:28:55 AM | Posted IP 162.1*****