» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பெண்ணைக் கொன்று 10 பவுன் நகை கொள்ளை வழக்கு: கபடி வீரர் அதிரடி கைது!

செவ்வாய் 14, ஜூலை 2026 7:47:42 AM (IST)

விளாத்திகுளம் அருகே பெண்ணைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கபடி வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (62). ஓய்வுபெற்ற சத்துணவு மேற்பார்வையாளரான இவர், ஜூலை 6-ஆம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவைத் திறந்து வைத்துவிட்டுத் தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவதியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார். 

காலையில் எழுந்த கணவர் திருக்கண்ணன், மனைவி கொலையுண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். விளாத்திகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளூர் நபர்தான் இக்கொலையைச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். 

அதன் அடிப்படையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கபடி வீரர் திருமணி முருகன் (26) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், திருமணி முருகன் கலாவதியைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த பின், தன் வீட்டின் முன் கட்டிலில் சர்வ சாதாரணமாகத் தூங்கியுள்ளார். 

காலையில் கலாவதியின் உடலைப் பார்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளார். காவல்துறையினர் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான திருமணி முருகன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து

BalaJul 16, 2026 - 05:35:05 PM | Posted IP 104.2*****

Vijay Uncle.... Yenge poneenga

மக்கள்Jul 14, 2026 - 05:13:08 PM | Posted IP 162.1*****

அடிக்கடி கொலைகள் வருவதற்கு காரணம் பழைய கொலை குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை கொடுக்காததே கரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory