» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வருடாந்திர நிகர லாபம் ரூ.1,337.55 கோடியாக உயர்வு: நிதிநிலை அறிக்கை வெளியீடு!
வியாழன் 16, ஜூலை 2026 5:17:04 PM (IST)
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.1,338 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கியின் 104-வது வருடாந்திரப் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB) மார்ச் 31, 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளைத் தனது தலைமை அலுவலகத்தில் வெளியிட்டுள்ளது.104 வருட பாரம்பரியமிக்க வங்கியின் மைய செயல்பாட்டு மாதிரியின் வலிமையால் இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வங்கியின் வரலாற்றிலேயே மிக அதிகப்பட்ச காலாண்டு லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் சலி எஸ். நாயர் தெரிவித்துள்ளார்.
நிதிநிலை மற்றும் வர்த்தக விபரங்கள் (ஆண்டு ஒப்பீடு):
• மொத்த வர்த்தகம்: முந்தைய ஆண்டின் ரூ.98,055 கோடியிலிருந்து 17.37% வளர்ச்சி பெற்று ரூ.1,15,091 கோடியாக உயர்ந்துள்ளது.
• வைப்புத்தொகை மற்றும் CASA: மொத்த வைப்புத்தொகை 14.94% உயர்ந்து ரூ.61,712 கோடியாகவும், வங்கியின் CASA கணக்குகள் 22.35% வளர்ச்சியுடன் ரூ.17,365 கோடியாகவும் அதிகரித்துள்ளன.
• வங்கியின் கடன்கள் (Advances): வங்கியின் மொத்தக் கடன் 20.32% உயர்ந்து ரூ.53,379 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சில்லறை, வேளாண் மற்றும் எம்எஸ்எம்இ (RAM) பிரிவின் பங்களிப்பு 94.66% ஆக உயர்ந்துள்ளது.
• லாப விவரங்கள்: வங்கியின் நிகர லாபம் 13.10% வளர்ச்சியடைந்து ரூ.1,337.55 கோடியாக உயர்ந்துள்ளது (முந்தைய ஆண்டு ரூ.1182.61 கோடி). செயல்பாட்டு லாபம் ரூ.1855.23 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் 9.84% உயர்ந்து ரூ.2527.27 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
சொத்து தரம் மற்றும் மூலதன நிலை: ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் மதிப்பீடு மற்றும் வலுவான மீட்பு நடவடிக்கைகள் காரணமாக வங்கியின் வாராக்கடன் கணிசமாகக் குறைந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் (Gross NPA) 1.25%-லிருந்து 0.73% ஆகவும், நிகர வாராக்கடன் (Net NPA) 0.36%-லிருந்து 0.18% ஆகவும் குறைந்துள்ளன. வங்கியின் நிகர சொத்து மதிப்பு (Networth) 12.22% உயர்ந்து ரூ.10,110 கோடியை எட்டியுள்ளது. மூலதனப் போதுமான விகிதம் (CRAR) 33.73% ஆக வலுவடைந்துள்ளது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு 10 ரூபாய் முகவிலை கொண்ட பங்கிற்கும் ரூ.12.50 இறுதி லாபப்பங்கீடு (Dividend) வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.
தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் கிளை விரிவாக்கம்: இவ்வெண்ணிக்கை நிதியாண்டில் அகில இந்திய அளவில் 44 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளதன் மூலம் வங்கியின் மொத்தக் கிளைகளின் எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர் சேவை வேகத்தை உயர்த்த ஒராக்கிள் சிஎக்ஸ் (Oracle CX) தளம், செலவு மேலாண்மைக்கான விஎம்எஸ் (VMS) தளம், காகிதமில்லா டிஜிட்டல் முறைக்கான பிபிஎம் (BPM) தளம் மற்றும் ஏஐ (AI) அடிப்படையிலான அழைப்பு மையம் (Call Centre) ஆகியவை செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் RuPay கிரெடிட் கார்டுகளுக்கு UPI வசதி மற்றும் இணைய வங்கி மூலம் சுங்க வரி செலுத்தும் வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)


