» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ரூ.3 கோடியில் புதிய விடுதி: அமைச்சர் ஸ்ரீநாத் திறந்து வைத்தார்!
சனி 1, ஆகஸ்ட் 2026 8:02:19 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பணியாளர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி கூடுதல் கட்டடத்தை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இக்கல்லூரியில், கடந்த 2017-ஆம் ஆண்டு 33 மாணவியர் தங்கும் வகையில் தரைத்தளத்துடன் விடுதி கட்டப்பட்டது. தற்போது மாணவியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கூடுதலாக 80 மாணவியர்கள் தங்குவதற்கு ஏற்ப இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் (ICAR) ரூ.3 கோடி நிதி உதவியுடன் முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் கட்டப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் 18 அறைகளும், இரண்டாம் தளத்தில் 7 அறைகளும் என மொத்தம் 25 புதிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. மாணவியர் தங்கும் அறைகளுடன், அவர்கள் படிப்பதற்கும் விளையாடுவதற்கும் ஏற்பப் பல்நோக்கு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசுச் செயலாளர் அனுஜார்ஜ் தலைமை வகிக்க, மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் முன்னிலையில் இக்கட்டடம் திறந்து வைக்கப்பட்டுப் பார்வையிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாயஜோஸ், தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கு.அ. புஷ்ரா ஷப்னம் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)



makkalAug 3, 2026 - 01:35:56 PM | Posted IP 172.7*****