» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குலசை முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடைவிழா நாளை தொடக்கம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 10:45:08 AM (IST)
பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் ஆடிக் கொடைவிழா நாளை (திங்கள்கிழமை) தொடங்குவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறும் ஆடிக் கொடைவிழா, நாளை இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையுடன் தொடங்குவதைத் தொடர்ந்து இரவில் வில்லிசை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4 (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி, 8 மணி, மாலை 5 மணி மற்றும் இரவு 7 மணிக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். காலை 10 மணி மற்றும் இரவு 11 மணிக்குக் கும்பம் திருவீதி உலா நடைபெறும். மதியம் 12 மணி மற்றும் இரவு 7 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்குச் சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
ஆகஸ்ட் 5 (புதன்கிழமை): காலை 8 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு அன்னதானம், பகல் 11:30 மணிக்கு வில்லிசை, இரவு 9 மணிக்குச் சிறப்பு மகுடாட்டம் ஆகியவை நடைபெறும்.மாலை 5 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 8:30 மணிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.
விழாவையொட்டி நாளை காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 4-ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து குலசேகரன்பட்டினத்திற்குச் சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குக் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான, சுமார் 20 லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாகச் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)



மக்கள்Aug 3, 2026 - 10:41:24 PM | Posted IP 104.2*****