» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உப்பளத் தொழிலைக் காக்கப் போராட்டம் நடத்தினால் தூத்துக்குடி தாங்காது: சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:06:07 AM (IST)

உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவைச் செயலாளரும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிறுவனத் தலைவருமான சுபாஷ் பண்ணையார் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி கடற்கரையை ஒட்டியுள்ள முள்ளக்காடு பகுதியில் கோவளம், பசுவந்தனை, தன்பாடு ஆகிய இடங்களில் கடந்த 93 ஆண்டுகளாகச் சிறிய அளவிலான உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இத்தொழிலை நம்பி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சார் ஆட்சியர் பிரபு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்க நிறுவனத் தலைவர் சுபாஷ் பண்ணையார் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தில் சுபாஷ் பண்ணையார் பேசியதாவது: "இப்பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமே உப்புத் தொழிலும் மீன்பிடித் தொழிலும் தான். ஏற்கனவே பனைத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உப்பளத் தொழிலையும் அழிக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதற்குத் தீர்வு காண வேண்டியவர்கள் அதிகாரிகள் அல்ல; தமிழக அரசுதான்.
உப்பள உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தைக் காக்கப் போராட்டத்தில் தீவிரமாக இறங்கும் நிலை ஏற்பட்டால், தூத்துக்குடி மாவட்டம் அமைதியாக இருக்காது. எனவே, அரசே எங்களைப் போராட்டத்திற்குத் தள்ளாமல் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும். தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைச் சந்திக்க முடியவில்லை. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், அடுத்தகட்டப் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும்." என்றார்
இப்போராட்டத்தில் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் செயலாளா் சேகர், தலைவர் மந்திரமூர்த்தி, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், முருகேசன், எல்.ஆர். சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ பால், பிரபாகர் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பொன்ராஜ், பரமசிவன், பேச்சிமுத்து மற்றும் முத்தையாபுரம், முள்ளக்காடு, பொட்டல்காடு, புல்லாவழி, எம். சவேரியார்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டு, பாரம்பரிய உப்புத்தொழில், மீன்பிடித் தொழில் மற்றும் இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது என முழக்கங்களை எழுப்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)



சுபாஷ்Aug 2, 2026 - 03:51:57 PM | Posted IP 162.1*****