» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைக் மீது கார் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:14:59 AM (IST)
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் மந்திரமூர்த்தி (60). ஓட்டுநரான இவர், தனது இருசக்கர வாகனத்தில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். புதூர் பாண்டியாபுரம் அருகே, நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவர் பிரிக்கப்பட்டு வழி அமைக்கப்பட்டிருந்த இடத்தில், மேற்கிலிருந்து கிழக்காகச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, குறுக்குச்சாலையில் இருந்து தூத்துக்குடி நோக்கி அதிவேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக மந்திரமூர்த்தியின் பைக் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட மந்திரமூர்த்தி, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த புதியம்புத்தூர் போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய கே. வேலாயுதபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜஸ்டின் டேனியல் (48) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:43:22 PM (IST)

மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25 அடி உயர்வு!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:42:22 AM (IST)

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)



makkalAug 3, 2026 - 01:00:19 PM | Posted IP 104.2*****