» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை: 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 9:19:32 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் நீண்ட நாட்களாகச் சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகத் துண்டித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2025-26-ஆம் நிதி ஆண்டு வரை (31.03.2026 வரை) சொத்து வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் செலுத்தாத வரி விதிப்பதாரர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி ஆணையரின் உத்தரவின் படியும், கிழக்கு மண்டல உதவி ஆணையரின் அறிவுறுத்தலின் படியும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்கள் 24, 29, 38, 39 மற்றும் 41 ஆகிய பகுதிகளில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன் பகுதியாக வடக்கு ரதவீதி, சந்தை ரோடு, மீனாட்சிபுரம் மேற்கு, பாளையங்கோட்டை ரோடு மற்றும் குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலத்திற்குச் சொத்து வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாகத் துண்டிக்கப்பட்டன. இக்கட்டிடங்களின் வரி நிலுவைத் தொகை ரூ.6,000 முதல் ரூ.95,000 வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்கள், தங்களது சொத்து வரி நிலுவையை 3 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், சட்ட விதிகளின்படி அடுத்தகட்டமாக ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்களது கட்டிடங்களுக்கான சொத்து வரி, குடிநீர்க் கட்டணம், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடைக் கட்டணம் போன்ற வரிகளை நடப்புக் காலம் வரை செலுத்தியுள்ளனரா என்பதைச் சரிபார்த்து, நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் குடிநீர் இணைப்புத் துண்டிப்பு மற்றும் இதர சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
MuruganAug 5, 2026 - 12:15:38 PM | Posted IP 162.1*****
இனி தொழில் உரிமசான்றிதழ் பெற அல்லது புதுப்பிக்க , தொழில் அதைவிட நடப்பு நிதியாண்டு கட்டிட சொத்துவரி நகல் மற்றும் உரிமையாளர்கள் ஆதார் நகல்கள் , நில உடைமை உரிமையாளர் ஆவணம் மற்றும் உரிமையாளர்கள் ஆதார் எண் , தொழில் உரிமையாளருடன் புரிந்த புரிந்துணர்வு பதிவுத்துறை வாடகை உடன்படிக்கை குத்தகை ஒத்தி பதிவு அலுவலகம் நேரில் வராமல் ஆன்லைன் பதிவை அறிமுகபடுத்தியதால் பதிவூத்துறையில் நேரடியாக ஆன்லைனில் பதிந்த ஆவணம் அல்லது தனித்த கட்டிட மற்றும் பட்டா நேரடி உரிமையாளர் என்ற டிஜிட்டல் பதிவு களத்தை கட்டாயமாக்கி வருவாய்துறை மற்றும் உள்ளாட்சி துறை ஒப்புதல் சரிபார்ப்பு உறுதி செய்தபிறகு அளிக்க வேண்டும். இதன் மூலம் கணக்கில காட்டாத போலி பட்டாசு ஆலை, காயிலான்கடை,மருத்துவமனை, கல்வி நிலையங்கள் அரசு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு , மத வழிபாட்டு சொத்துக்கள் ஆக்கிரமிப்பு , பிறர்நில ஆக்கிரமிப்பு மற்றும் பல கருப்புபண புழக்க கள்ளசந்தை தொழில்கள் கட்டுப்படுத்தப்படும். நிதியாண்டிற்கு ₹25 லட்சத்திற்கு குறைவான பரிவர்த்தனை உடைய குறுசிறு மற்றும் நுண்குறுசிறு தொழில்களின் பதிவையும் தொழில் சார் எந்திர உரிமயையும் புதுப்பிக்க உள்ளாட்சியே முற்றிலும் இலவசமாக செய்ய தர வேண்டும் .
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)



BabuAug 7, 2026 - 08:58:19 PM | Posted IP 172.7*****