» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு மு.க ஸ்டாலின் பாராட்டு

செவ்வாய் 21, நவம்பர் 2023 4:34:50 PM (IST)



பல்கலைக்கழக வேந்தராக முதல் -அமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இதுதான்

ஜெயலலிதா வேந்தராக தன்னையே நியமித்துக் கொண்டதை நான் மனதார பாராட்டுகிறேன். முதல்-அமைச்சர் வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா. முதல்-அமைச்சர் பலகலைக்கழக வேந்தராக இருப்பதால் மக்கள் நினைப்பதை செய்ய முடிகிறது. பல்கலைக்கழகங்களுக்கு முதல்-அமைச்சர் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இதுதான். பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. நமது சட்ட போராட்டத்திற்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory