» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தையை கொன்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை: நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
சனி 13, ஏப்ரல் 2024 10:30:48 AM (IST)
தந்தையை கொன்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வெள்ளமோடி வடக்கு தெருவை சேர்ந்தவர் லிங்கதுரை (50), கொத்தனார். இவருடைய மனைவி கோமதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சூரியா (24). இவர் பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மது குடிக்கும் பழக்கம் உடைய சூரியா அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனை அவரது தந்தை லிங்கதுரை கண்டித்து வந்தார். மேலும் செலவுக்கும் லிங்கதுரையிடம் பணம் கேட்டு அவர் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 22-7-2020 அன்று இரவு லிங்கதுரை, கோமதி, சூரியா ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது தந்தை-மகன் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நிலவியது. இதில் ஆத்திரமடைந்த சூரியா வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் லிங்கதுரையை தாக்கினார்.
இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில், சூரியாவை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மதியழகன் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் : ஆட்சியர் தகவல்!
சனி 19, ஏப்ரல் 2025 5:12:02 PM (IST)

என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல.. த.வெ.கவின் விர்ச்சுவல் வாரியர்ஸ்: விஜய் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 4:44:50 PM (IST)

தமிழக மக்களின் அவுட் ஆஃப் கன்ட்ரோல் ஆக ஸ்டாலின் உள்ளார்: தமிழிசை விமர்சனம்!
சனி 19, ஏப்ரல் 2025 4:32:20 PM (IST)

தமிழகத்தில் இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை
சனி 19, ஏப்ரல் 2025 4:18:14 PM (IST)

மனசாட்சி உள்ள எவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க மாட்டார்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சனி 19, ஏப்ரல் 2025 3:45:56 PM (IST)

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)
