» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பழனி முருகன் கோவிலுக்கு 6 அடி உயர வேலை காணிக்கையாக வழங்கிய ரஷிய பக்தர்கள்!

புதன் 27, நவம்பர் 2024 12:18:12 PM (IST)



பழனி முருகன் கோவிலுக்கு ரஷிய பக்தர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை காணிக்கையாக வழங்கினர்.

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதேபோல் மலேசியா, சிங்கப்பூர், இத்தாலி, ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் ரஷியாவை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பக்தர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் நவக்கிரக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் ரஷிய பக்தர்கள் நேற்று காலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் அவர்கள் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பின்னர் மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்த வேலை காணிக்கையாக செலுத்தினர். வெளிநாட்டு பக்தர்கள் வேலுடன் பழனி மலைக்கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தது, மற்ற பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory