» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கைவினைஞர் தலைமுறைக்கு திமுக அரசு அநீதி செய்கிறது : தமிழிசை குற்றச்சாட்டு

வியாழன் 28, நவம்பர் 2024 3:55:45 PM (IST)

விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் எனவும், இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்றும் மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த முடிவுக்கு பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாத முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முடிவு கண்டிக்கத்தக்கது. 

பாரம்பரிய கைவினைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. மேலும் கைவினைஞர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். ஆனால் அரசியல் காரணங்களுக்காக கைவினைஞர் தலைமுறைக்கு திமுக அரசு அநீதி செய்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory