» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு

திங்கள் 13, ஜனவரி 2025 8:35:22 AM (IST)

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் "கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியை பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், போலீஸ் துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்துக்கு நேர் எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக்கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, பேரிடர் மாடல் என்று உரக்கச் சொல்ல தொடங்கி விட்டனர்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியை பொறுத்தவரை, நடைபெறவிருப்பது இடைத்தேர்தலுக்கான, இடைத்தேர்தல். கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, பொதுமக்களை பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதை பார்த்தோம். தி.மு.க., தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.வை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளை போல பொதுமக்களை அடைத்து வைக்க தி.மு.க.வை அனுமதிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை. மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும், நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்து உள்ளோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

மக்கள் நலன்Jan 13, 2025 - 12:54:12 PM | Posted IP 162.1*****

நல்ல முடிவு.. இதனால் திமுகவுக்கு எதிராக பெரிய காட்சிகள் களத்தில் இல்லை. இதனால் அவர்கள் முந்தைய இடைதேர்தல் போல மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க தேவையில்லை கொடுக்க மாட்டார்கள். மக்கள் திருந்துவார்கள் திருந்த வேண்டும். ஓட்டுக்கு காசு வாங்கி கொண்டு ஒட்டு போடுவது பிறகு அந்த கட்சிகளை குறை சொல்லுவது என்ற கேடு கேட்ட இந்த மக்கள் திருந்த வேண்டும், அப்போதுதான் அண்ணாமலை போன்ற நல்ல தலைவர்கள் வருவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory