» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய்க்கு நிச்சயமாக அரசியல் கை கொடுக்கும் : ஆனந்த் ராஜ் பேட்டி

வெள்ளி 29, நவம்பர் 2024 3:24:21 PM (IST)

"சீமானை நடிகராக தான் தெரியும், நடிகர் விஜய்க்கு நிச்சயமாக அரசியல் கை கொடுக்கும்" என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டினர் தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்க்க ஆசைப்படுவார்கள். இது கட்டட கலையுடன் கூடிய சிறப்பு வாய்ந்த ஆலயம். 

சினிமா தற்போது நன்றாக உள்ளது. அதனால்தான் அரசியலில் இல்லாமல் அதை பார்த்து வருகிறேன் என்றும் சீமானை நடிகராக தான் தெரியும், அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவருடன் சில விஷயங்களை நேரில் பேசி பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.

மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என்று நம்புவதாகவும், தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பதற்கு தமிழ்காரர்களை விட வட இந்தியர்கள், அயல் நாட்டினர் அதிகயளவில் வருகின்றனர்.இது மிகப்பெரிய பெருமை என்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும், தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி என்று ஆனந்த் ராஜ் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory