» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடை வாடகை மீதான 18% ஜிஎஸ்டியை கண்டித்து ஜன.11ல் ஆா்ப்பாட்டம்: விக்கிரமராஜா

ஞாயிறு 8, டிசம்பர் 2024 10:35:33 AM (IST)

கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை கண்டித்து ஜன. 11-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தாா்.

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடை வாடகை மீதான 18 சதவித ஜிஎஸ்டியை திரும்ப பெற வேண்டும். ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயா்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயா்வு, தொழில் வரி உயா்வு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி, ஜன. 11-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறதோ, அங்கேயே தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச. 17-ஆம் தேதி திருச்சியில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்றாா். 


மக்கள் கருத்து

J.J.JDec 8, 2024 - 01:55:23 PM | Posted IP 162.1*****

TAMILNADU GET BENEFIT OF MORE RETURNS FROM GST. ASK TAMILNADU TO REDUCE.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory