» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜன.15, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!!
வெள்ளி 10, ஜனவரி 2025 4:28:03 PM (IST)
குமரி மாவட்டத்தில் ஜன.15 மற்றும் 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், "திருவள்ளுவர் தினம் (15.01.2025) மற்றும் குடியரசு தினம் (26.01.2025) ஆகிய தினங்களை முன்னிட்டு 15.01.2025 மற்றும் 26.01.2025 ஆகிய தினங்களில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மதுபானக்கடைகள் மற்றும் FL2, FL3, FL3A மற்றும் FL3AA உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.