» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இந்தியா கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் : காங்கிரஸ் தலைவர் அழைப்பு!

சனி 18, ஜனவரி 2025 12:19:52 PM (IST)

இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை தவெக தலைவர் விஜய், வருகிற ஜனவரி 20 ஆம் தேதி சந்திக்கவிருக்கிறார். அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் விஜய் முதல்முறையாக போராட்டக் களத்திற்கு நேரடியாக செல்லவிருப்பதால், அரசியல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'பரந்தூர் ஏகனாபுரம் பகுதி எனது சட்டப்பேரவைத் தொகுதி. நான்  மக்களிடம் பேசியிருக்கிறேன். மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லியிருக்கிறேன். மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.

விஜய் தனது கட்சி மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் பேசினார். மதவாத சக்தியை, இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான் அவருக்கும் அவரது கொள்கை கோட்பாட்டிற்கும் எல்லோருக்கும் நல்லது' என்று கூறினார்.


மக்கள் கருத்து

விஜய் விஜய்Jan 20, 2025 - 04:03:16 PM | Posted IP 172.7*****

காங்கிரஸ் க்கு வாக்கு வங்கி இல்லை, எப்படியும் காங்கிரஸ் திமுக தோளில் ஏறித்தான் சவாரி செய்யும், வேறு வழியில்லை

இந்தியா இந்தியாJan 19, 2025 - 02:13:27 PM | Posted IP 172.7*****

இப்பதானே கட்சி ஆரம்பித்து இருக்கிறார் அதற்குள் அவரை காணாமல் பண்ணி விட வேண்டாம், அதற்குத்தான் வைகோ ஒரு தடவை சந்தித்தால் விஜய் எங்கோ காணாமல் போயிடுவார்....

ஆனந்த்Jan 19, 2025 - 12:56:31 PM | Posted IP 172.7*****

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விஜய் இந்தியா கூட்டணியில் இணவார்

முட்டாள்Jan 18, 2025 - 12:57:22 PM | Posted IP 172.7*****

அன்னைக்கு திமுகவிடம் பிச்சை எடுத்த பாகிஸ்தான் ஆதரவு காங்கிரஸ், இன்று விஜய்யை தூக்கிட்டு ஓட்டு பிச்சை எடுக்க பார்க்கிறது , போங்க போங்க விஜய்யை தூக்கிட்டு பிச்சை எடுக்க போங்க.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory