» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திடீர் சோதனை
புதன் 5, பிப்ரவரி 2025 11:23:52 AM (IST)
மாநகராட்சி ஊழியர் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிட்டராக பணிபுரிந்து வருபவர் கண்ணன். வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அளிக்கப்பட்ட புகார் வழக்கின் பேரில், மாநகராட்சி ஊழியர் கண்ணன் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் அவென்யூ பகுதியில் வசித்து வருபம் இவா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.