» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : 2 மணி நேரத்தில் சுமார் 11% வாக்குப்பதிவு
புதன் 5, பிப்ரவரி 2025 11:52:08 AM (IST)
ஈரோடு வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போடப்பட்டுள்ளது.வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வாக்களித்தார்.
பின்னர், 95 சதவிகித வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.குளிர் காரணமாக, வாக்குப்பதிவு தொடங்கியபோது மக்கள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை, ஆனால் பின்னர் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வந்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் வாக்காளர்கள் வந்திருந்து வாக்களித்தாகவும், வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் சுமார் 11 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாக்குப்பதிவு எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது.இதனிடையே மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என வலியுறுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.