» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்டம் புதிய அத்தியாயம் படைத்துள்ளது : அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்!
புதன் 19, பிப்ரவரி 2025 3:22:23 PM (IST)

கன்னியாகுமரியில் கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு, 2025ம் ஆண்டு குமரி மாவட்டம் புதிய அத்தியாயத்தினை படைத்துள்ளது" என தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அய்யன் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000 ஆண்டு திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் விவேகானந்தர் பாறை முதல் அய்யன் திருவள்ளுவர் சிலையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்து கடந்த 30.12.2024 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் சிலை நிறுவி 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
கடல்சார் நடைபாதை பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10மீட்டர் ஆகும். மேலும் கடல் அரிப்பு கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு கொண்டு தான் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுனாமி காலத்தில் அலைகளின் உயரம் கணக்கீட்டு தான் பாலம் கட்டப்பட்டுள்ளது. உறுதித்தன்மையினை பொறுத்த வரை 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று அடித்தாலும் தாங்க கூடியவகையில் தான் பாலம் கட்டப்பட்டுள்ளது.
கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலையினை கொண்டு தான் கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.
மேலும் அய்யன் திருவள்ளுவர் சிலையினை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்கு வழிகாட்டிட காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டிற்குட்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் நாள்தோறும் அதிக அளவில் கண்ணாடி இழை பாலத்தினை வந்து பார்வையிடுகிறார்கள்.
ஜனவரி மாதத்தினை பொறுத்த வரை மட்டும் 2 இலட்சத்தில் பதினாயிரம் சுற்றுலா பயணிகளும், பிப்ரவரி 1 முதல் 17ம் தேதி வரை மட்டும் 1 இலட்சத்தி இருபத்தி நாலாயிரம் சுற்றுலா பயணிகள் என மொத்தம் 3.50 இலட்சம் சுற்றுலா பயணிகள் இதுவரை பார்வையிட்டுள்ளார்கள்.
இன்றைய ஆய்வின் நோக்கம் கண்ணாடி பாலத்தில் சிறு சிறு பணிகளை பார்வையிட்டு, மீண்டும் பாலத்தின் உறுதித்தன்மையினை ஆராய சென்னை ஐஐடி-யை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் செயலாளர் தலைமையில் வருகை புரிந்துள்ளார்கள். குறிப்பாக கண்ணாடி இழைப்பாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணி, திருவள்ளுவர் சிலையினை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 2025ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் புதிய அத்தியாயத்தினை படைத்துள்ளது. இவ்வாறு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார்கள்.
ஆய்வில் சிறப்பு அலுவலர் திட்டம் சந்திர சேகர், தலைமை பொறியாளர் கட்டுமானம் மற்றும் பாரமரிப்பு சந்திய பிராகாஷ், கண்காணிப்பு செயற்பொறியாளர் (திருநெல்வேலி) சராதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்டில் நிற்பார்கள்: இபிஎஸ் ஆவேசம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் : வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:19:45 AM (IST)

கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)

ஆம்னி பஸ்சில் 49 பவுன் நகை திருடிய கிளீனர் சிறையில் அடைப்பு: மேலும் 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:18:21 AM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)
