» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் 6 பேருக்குப் புதிய வாழ்வு கிடைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி மகேஷ் (23). இவர் சில மாதங்களுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்தவர். கடந்த 16-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, காவல்கிணறு ரயில்வே மேம்பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்தார்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். "மண்ணோடு மண்ணாக விரும்புவில்லை, அவர் உறுப்புகள் மூலம் பிறர் வாழட்டும்" என்ற குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள் மற்றும் தோல் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன. இவை திருச்சி, காரைக்குடி, மதுரை மற்றும் நாகர்கோவில் மருத்துவமனைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு 6 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்திற்கு மார்ச் மாதம் 3 முறை பிரதமர் மோடி வருகை: மதுரை, வேலூர், திருச்சியில் பிரசாரம்
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:38:40 PM (IST)

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற இணைந்து பயணிப்போம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
வியாழன் 19, பிப்ரவரி 2026 12:00:03 PM (IST)

முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:57:51 AM (IST)

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.177.80 கோடி ஊக்கத் தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:45:34 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு: எஸ்பி திடீர் ஆய்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:22:40 AM (IST)

இந்தியத் துறைமுக வரலாற்றில் மைல்கல்: வ.உ.சி. துறைமுக ஆணையம் சார்பில் ஏஐ அமர்வு!
புதன் 18, பிப்ரவரி 2026 5:22:09 PM (IST)

