» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்திற்கு மார்ச் மாதம் 3 முறை பிரதமர் மோடி வருகை: மதுரை, வேலூர், திருச்சியில் பிரசாரம்

வியாழன் 19, பிப்ரவரி 2026 12:38:40 PM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மூன்று முறை தமிழகம் வருகிறார்.

மதுரை, வேலூர் மற்றும் திருச்சியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பிரதமர் பங்கேற்று உரையாற்ற உள்ளார். 

மார்ச் 1 - மதுரை: மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் தேஜகூ தலைவர்களுடன், புதிதாகக் கூட்டணியில் இணையவுள்ள கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை எய்ம்ஸ் திறப்பு: பிரசாரத்தைத் தொடர்ந்து, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பின்னர், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரதமரின் இந்த வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 7 - வேலூர்: மதுரையைத் தொடர்ந்து, மார்ச் 7-ம் தேதி வேலூரில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார்.

மார்ச் 11 - திருச்சி: மார்ச் 11-ம் தேதி திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்.

பிரதமரின் இந்தப் பயணங்களை ஒருங்கிணைக்கவும், பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளைக் கவனிக்கவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் மாநில அளவிலான சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory