» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் விமான நிலையம் : பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம். பி கோரிக்கை

செவ்வாய் 11, மார்ச் 2025 5:49:51 PM (IST)

கன்னியாகுமரியில் பசுமை விமானநிலையம் அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்பி கோரிக்கை வைத்துள்ளார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல புகழ் வாய்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளது. பிற நாடுகள் மற்றும் பிற மாநிலத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் லட்சகணக்கில் குமரியில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர். இந்தியாவின் தென் கோடியில் உள்ள குமரி மாவட்டத்திற்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து ஒரு சவாலாக உள்ளது. உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகள் எளிதில் குமரிக்கு வருகை தர இந்த விமான நிலையம் மிக அவசியம்.

கன்னியாகுமரியை உலக தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக்க இங்கு ஒரு விமான நிலையம் மிக அவசியம். இங்கு ஒரு விமான நிலையம் அமையும் பட்சத்தில், இது இந்திய, தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த பெரிதும் உதவும். எமது மாவட்டத்தின் வேலை வாய்ப்பை பெருக்கவும், இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் விமான நிலையம் துணை நிற்கும்.

மேலும் இந்த பகுதிக்கு ஏராளமான முதலீட்டை கொண்டு வருவதுடன் கன்னியாகுமரியை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற செய்ய ஒரு விமான நிலையம் தேவை. கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் தேவை என்ற மக்களின் நீண்ட நாள் கனவை நிஜமாக்கிட இந்த அவையின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என தெரிவித்தார்.


மக்கள் கருத்து

ஓ அப்படியாMar 11, 2025 - 06:55:17 PM | Posted IP 172.7*****

இயற்கை வளங்கள், மலைகளை உடைத்து விற்று காசு பார்கவா??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory