» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு

செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)

கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஜவுளிகடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 

குமரி மாவட்டம், கொட்டாரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் குங்கர்சிங் (25). இவர் தனது சகோதரர் சேத்தன் சிங்குடன் கொட்டாரம் பகுதியில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு குங்கர்சிங் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரி சென்றார். பின்னர் அங்கிருந்து கொட்டாரம் புறப்பட்டார். 

ரெயில் நிலையம் சந்திப்பு அருகே வந்த போது, எதிரே பறக்கை தெற்கு தெருவை சேர்ந்த பைசல் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள் களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் குங்கர் சிங், பைசல் மற்றும் அவருடன் வந்த பறக்கை யைச் சேர்ந்த இர்பான் (21) ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவிலில்உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குங்கர்சிங் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory