» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!
புதன் 12, மார்ச் 2025 12:23:07 PM (IST)
"உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்..
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள். முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரிகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்தியக் கல்வி அமைச்சர் பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும். தமிழகத்தின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழக எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழக மக்களை அவமானப்படுத்துகிறீர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா? NEP, மும்மொழிக் கொள்கையைத் தமிழக அரசு அனுப்பிய பிஎம் ஸ்ரீ, MoU முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல. நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழக மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்.” என்று பதிவிட்டிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதின் கட்கரியுடன் கனிமொழி எம்பி சந்திப்பு: தூத்துக்குடி நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை!
புதன் 12, மார்ச் 2025 5:14:30 PM (IST)

இரண்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு!
புதன் 12, மார்ச் 2025 3:38:27 PM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் ஏற்கவில்லை: அன்பில் மகேஸ் விளக்கம்
புதன் 12, மார்ச் 2025 10:44:32 AM (IST)

பைக்குகள் மோதி விபத்து: ஜவுளிகடை உரிமையாளர் சாவு
செவ்வாய் 11, மார்ச் 2025 7:57:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
செவ்வாய் 11, மார்ச் 2025 7:54:35 PM (IST)
