» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிதின் கட்கரியுடன் கனிமொழி எம்பி சந்திப்பு: தூத்துக்குடி நெடுஞ்சாலையை சீரமைக்க கோரிக்கை!

புதன் 12, மார்ச் 2025 5:14:30 PM (IST)



தூத்துக்குடியில் தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கனிமொழி எம்பி மனு அளித்தார்.

டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு மேற்கொண்டார். அப்போது அவர் அளித்தம மனுவில், "எனது தொகுதியான தூத்துக்குடியில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலைகளில் பல்வேறு பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மதுரை-தூத்துக்குடி பிரிவு NH-38 (பழைய NH-45B) நான்கு வழிச் சாலையில் பல இடங்கள் சேத் அடைந்துள்ளன. மேலும் இது பொதுமக்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது. மதுரை-தூத்துக்குடி பிரிவு NH 38 இல், துரைசாமிபுரம், கீழ ஏரல், குருகுச்சாலை ஆகிய இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகின்றன. இதனை 2015-18 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்டாலும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. 

எனவே, பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பல விபத்துகளையும் தவிர்க்கும். எனவே, மதுரை-தூத்துக்குடி NH-38 பிரிவில் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory