» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கத்திரிக்கோலால் குத்தி பெண் கொடூர கொலை: வாலிபர் கைது - தூத்துக்குடி அருகே பயங்கரம்!

ஞாயிறு 30, மார்ச் 2025 7:42:33 PM (IST)

தூத்துக்குடி அருகே பெண்ணை கத்திரிக்கோலால் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி அருகே உள்ள  பொட்டலூரணி கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்தையா மனைவி பார்வதி (50), இவர் கணவர், குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் அடிக்கடி அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி செல்வாராம். இதை அவரது மகன் புஷ்பராஜ் (18) என்பவர் கண்டித்து உள்ளார். 

இன்று மாலை 5 மணி அளவில் பார்வதி மீண்டும் அவரதுவீட்டுக்கு சென்று உள்ளார். இதனால் புஷ்பராஜ் அவரை கண்டித்துள்ளார். இதனால் பார்வதி அவரிடம் வாக்குவாதம் செய்தாராம். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ், பார்வதியை கத்திரிக்கோலால் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பார்வதி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வதி சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

nishaApr 1, 2025 - 01:19:52 PM | Posted IP 162.1*****

truly good son .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory