» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு ஒரு சதவீத கட்டண குறைப்பு: இன்று முதல் அமல்!
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:39:31 PM (IST)
தமிழகத்தில் பத்திர பதிவு மேற்கொள்ளும் மகளிருக்கு ஒரு சதவீத கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சமூகத்தில் மட்டுமன்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திடும் வகையில், வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகள் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், 'தற்போதைய பதிவுகளில் 75 சதவீதம் மகளிர் இந்த சலுகையை பெற தகுதியை பெறுவார்கள். இந்த சலுகையின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை, நிதி சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என அரசு உறுதியாக நம்புகிறது' என கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அனைத்து பத்திரப்பதிவு அலுவலர்களும், இந்த அரசாணைப்படி செயல்பட பத்திர பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 8:07:24 PM (IST)

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை : விரிவுரையாளர் மீது புகார்
புதன் 2, ஏப்ரல் 2025 5:12:31 PM (IST)

சொத்து மதிப்பு சான்று வழங்க ரூ.3ஆயிரம் லஞ்சம் : கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கைது!
புதன் 2, ஏப்ரல் 2025 4:46:47 PM (IST)

லாரி டிரைவர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை!!
புதன் 2, ஏப்ரல் 2025 4:03:49 PM (IST)

கச்சத் தீவை மீட்கக் கோரி முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு : எடப்பாடி பழனிசாமி
புதன் 2, ஏப்ரல் 2025 3:43:41 PM (IST)

வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புதன் 2, ஏப்ரல் 2025 3:30:52 PM (IST)
