» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு : சீமான் பேட்டி
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:45:02 PM (IST)
"அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்க வந்தவன். வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்பதே எனது நிலைப்பாடு" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

அதேபோன்று அமைச்சர் நேருவின் சகோதரர் ராம ஜெயம் கொலை வழக்கிலும் விசாரிக்கப்பட்ட சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம் ஆகியோரை என்கவுண்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது நடந்து வரும் அனைத்து என்கவுண்டர்களும் போலியானது. உண்மையான குற்றவாளிகளை கண்டறியாமல், வழக்கை முடிப்பதிலேயே காவல் துறை முனைப்பு காட்டுகிறது.
யார் வேண்டுமானாலும் எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஆனால் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும். தமிழ் எனக்கு உயிர் மூச்சு. நான் இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு வருகிறேன். தீமையை தீமையால் வெல்ல நினைக்கக் கூடாது.
நன்மையால் தீமையை வெல்ல வேண்டும் என கருதுகிறேன். ஆள் மாற்றத்திற்கான அரசியலில் நான் இல்லை. அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்க வந்தவன். ஆகவே வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டி என்ற இதே நிலைப்பாடு தான். நான் கூட்டணி வைக்கப்போவதே அமெரிக்க அதிபர் ட்ரம்போடுதான் என சிரித்தவாறு கூறினார்.
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு, தேர்தல் நேரங்களில் இதுபோன்று சோதனைகள் நடத்துவது வாடிக்கையானது. தேர்தல் நடக்கும் போது நடைபெறும் திருவிழா போன்றது. அமலாக்கத்துறை வருமானவரித்துறை என வருவார்கள். சட்டமன்றத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள் பிரச்சனையை பேசுவதில்லை.
தமிழகத்திலேயே அதிக வழக்குகளை சந்தித்த அரசியல் கட்சி நாங்கள்தான். இதனால் எங்கள் கட்சியின் செயல்பாடு வேகம் குறையாது. கோலி குண்டு விளையாடியது கோர்ட்டு வாசலில்தான். நீதிபதி மன்றங்களும், ஜெயில்களும் கட்டப்பட்டதே எங்களுக்காகத்தான் என்று நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நான் வரவேற்கிறேன்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக- பாஜக. கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம் : நயினார் நாகேந்திரன்
வியாழன் 17, ஏப்ரல் 2025 12:13:48 PM (IST)

சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 17, ஏப்ரல் 2025 11:43:56 AM (IST)

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் அழகுமீனா பங்கேற்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:42:01 AM (IST)

குடும்பக்கட்டுப்பாடு செய்த பெண் கர்ப்பம்: ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 8:48:08 AM (IST)

நாகர்கோவிலில் பொன்னப்ப நாடாருக்கு சிலை : முதல்வருக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
புதன் 16, ஏப்ரல் 2025 8:44:09 PM (IST)

மாநில சுயாட்சியை வலியுறுத்துவதில் முதல்வர் ஸ்டாலின் சாம்பியன் : கமல்ஹாசன் புகழாராம்
புதன் 16, ஏப்ரல் 2025 5:01:52 PM (IST)
