» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தில் பராமரிப்பு பணிகள் : ஆட்சியர் ஆய்வு

வியாழன் 17, ஏப்ரல் 2025 3:18:39 PM (IST)



குமரி கண்ணாடி இழை பாலத்தில் மராமரத்து முடிந்து, ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (17.04.2025) கண்ணாடி இழை பாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அய்யன் திருவள்ளுவர் சிலையை கடந்த 2000 ஆண்டு திறந்து வைத்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையினை இணைத்து சுற்றுலாப் பயணிகள் அய்யன் திருவள்ளுவரை கண்டு களித்திட ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்து திருவள்ளுவர் சிலை நிறுவி 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி கடந்த 30.12.2024 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். மேலும் கடல் அரிப்பு கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு சிறந்து பொறியியல் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் படி இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளதோடு, சுனாமி போன்ற பேரிடர்களையும் கருத்தில் கொண்டு கண்ணாடி தரைத்தள பாலம் கட்டப்பட்டுள்ளது.

கண்ணாடி இழை தரைத்தள பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்ததைத்தொடர்ந்து, தற்போது அனைத்து நாட்களிலும் கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், மற்றும் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வருகை தந்து அய்யன் திருவள்ளுவர் சிலை உள்அரங்கில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை உலகத்தமிழர்கள் அனைவரும் மிகவும் ஆர்வம் காட்டி வாசித்து வருகிறார்கள் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தற்போது அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருவதைத்தொடர்ந்து கண்ணாடி இழை தரைத்தள பாலத்தின் உறுதித்தன்மையினை குறித்தும், சிறு சிறு மராமரத்து பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, ஓரிரு நாட்களில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory