» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இஸ்லாமியர்களின் வயிற்றில் உச்ச நீதிமன்றம் பாலை வார்த்துள்ளது : விஜய் வரவேற்பு
வியாழன் 17, ஏப்ரல் 2025 4:28:54 PM (IST)
வக்ஃபு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்விக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாட்டில் 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
சனி 19, ஏப்ரல் 2025 12:42:11 PM (IST)

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவிப்பு
சனி 19, ஏப்ரல் 2025 12:26:23 PM (IST)

அதிமுக கூட்டணியிலிருந்து எஸ்.டி.பி.ஐ. கட்சி விலகல்: பொதுச் செயலாளர் அறிவிப்பு!
சனி 19, ஏப்ரல் 2025 12:13:34 PM (IST)

காவல் துறையினருக்கு வார விடுமுறை அறிவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:49:58 AM (IST)

நடிகர் பாபி சிம்ஹா கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்; டிரைவர் கைது, கார் பறிமுதல்!
சனி 19, ஏப்ரல் 2025 11:39:44 AM (IST)

திருவனந்தபுரம் - மங்களூர் தினசரி இரவு நேர ரயில் நாகர்கோவில் வருமா? பயணிகள் கோரிக்கை!
சனி 19, ஏப்ரல் 2025 9:07:05 AM (IST)
