» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை உறுப்பினா் பதவி யாருக்கு? எடப்பாடி கே.பழனிசாமி முடிவு
செவ்வாய் 27, மே 2025 11:45:19 AM (IST)
அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்புள்ள 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளிலும் அதிமுக போட்டியிடுமா அல்லது கூட்டணிக் கட்சிக்கு ஒரு உறுப்பினா் பதவி ஒதுக்கப்படுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

இருப்பினும், மாநிலங்களவை உறுப்பினா் பதவி தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கருத்து தெரிவித்திருந்தாா். மேலும், தங்களுக்கு உறுதியளித்தபடி மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ஒதுக்க வேண்டும் என்றும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். ஆனால், கூட்டணிப் பேச்சுவாா்த்தையின்போது, அப்படி ஏதும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, தேமுதிக இப்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், அடுத்த ஆண்டு ஜனவரியில் கடலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அறிவித்துள்ளாா். இந்நிலையில், இப்போது 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அன்புமணி ராமதாஸின் பதவிக் காலம் இப்போது நிறைவு பெறுவதால் பாமகவும் மாநிலங்களை உறுப்பினா் பதவியை எதிா்பாா்க்கிறது. அதேபோன்று, பாஜகவிலும் சில மூத்த தலைவா்கள் மாநிலங்களவை உறுப்பினா் பதவியைப் பெற்றால் மத்திய அமைச்சராகலாம் என்று கருதுகின்றனா்.
அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட நிா்வாகிகள் இரு பதவிகளிலும் தங்கள் கட்சிதான் போட்டியிட வேண்டும்; 2026 பேரவைத் தோ்தலுக்கு பின்னா் கூட்டணிக் கட்சிக்கு வழங்கலாம் என தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனா்.
அதிமுக கூட்டணியில் இப்போது பாஜக மட்டும்தான் உள்ளது. கூட்டணிக்குள் பாமக அல்லது தேமுதிகவை கொண்டுவர மாநிலங்களவை உறுப்பினா் பதவி அளிக்கலாம்; ஆனால், இதில் யாராவது ஒரு கட்சிக்கு பதவி வழங்கினாலும் மற்றொரு கட்சிக்கு அதிருப்தி ஏற்படும். கூட்டணி அமைவதில் தேவையற்ற சா்ச்சை உருவாகக்கூடும். எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல், அதிமுகவே இரு இடங்களுக்கும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜகவுக்கு கிடைக்குமா? நயினாா் நாகேந்திரன் பதில்
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறும்போது, அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினா் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதில் பாஜகவுக்கு இடம் ஒதுக்கப்படுமா என்பது குறித்து பாஜகவின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தபால்காரர் மூலம் விளம்பரப் பிரசுரங்கள் அனுப்பும் சேவை அறிமுகம்: அஞ்சல் துறை அழைப்பு!
திங்கள் 2, ஜூன் 2025 5:44:18 PM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 385 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 2, ஜூன் 2025 4:44:59 PM (IST)

புதிய வகை வைரஸ்களால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது: விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி
திங்கள் 2, ஜூன் 2025 4:28:28 PM (IST)

தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 2, ஜூன் 2025 4:10:55 PM (IST)

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ ஓய்வு : தமிழக அரசு தகவல்
திங்கள் 2, ஜூன் 2025 4:05:26 PM (IST)

திமுக ஆட்சி அமைவதற்கு சூளுரை ஏற்போம் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
திங்கள் 2, ஜூன் 2025 3:18:05 PM (IST)
