» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார்: ரஜினிகாந்த் இரங்கல்!

வியாழன் 29, மே 2025 10:32:50 AM (IST)

பிரபல நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75.

கன்னிப் பருவத்திலே' படத்தின் நாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். அதற்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்தார். வெள்ளித்திரை நடிகர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்தவர் ராஜேஷ். தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வந்தவர் நடிகர் ராஜேஷ். 

இவர் நடிப்பில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும் பல சின்னத்திரை தொடர்களும் வெளியாகியிருக்கின்றன. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், 

நடிகர் விஜய் சேதுபதியின் தர்மதுரை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பைத் தாண்டி ஜோதிடத்திலும் ஆர்வம் கொண்டவரான இவர், அத்துறையிலும் கவனம் பெற்றவராகவே இருந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜேஷ் இன்று காலை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்ததார். 

ரஜினிகாந்த் இரங்கல்: அவர் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory