» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கமலுக்கு கன்னட அமைப்புகள் மிரட்டல்; முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? சீமான் கேள்வி
வியாழன் 29, மே 2025 12:36:32 PM (IST)
நடிகர் கமல்ஹாசனை கன்னட அமைப்புகள் மிரட்டும் விவகாரத்தில் பதிலடி தரவேண்டிய முதல்வர் ஸ்டாலின் வாய் திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளுக்கு மட்டுமல்ல உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்மொழிதான் என்பது உலக மொழியியல் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பேருண்மையாகும். அந்த வரையறைக்குள் கன்னட மொழியும் அடங்கும் எனும்போது அதை ஏற்பதில் கன்னட அமைப்புகளுக்கு என்ன சிக்கல்? வரலாற்று உண்மையை ஏற்க மனமில்லாத கன்னட வெறியர்களே, இத்தனை வன்முறை பேச்சுக்களையும் மிரட்டல்களையும் விடுக்கின்றனர். அதனை கர்நாடகத்தை ஆளும் காங்கிரசு அரசும் கண்டித்து தடுக்காது ஊக்குவிக்கின்றது என்பதுதான் பெருங்கொடுமையாகும்.
தமிழிலிருந்து கன்னடம் உருவானது என்பது கன்னட மொழிக்கு பெருமைதானே தவிர சிறுமை அல்ல; ஒருவேளை அந்த கருத்தில் கன்னட அமைப்புகளுக்கு மாற்றுக் கருத்து ஏதேனும் இருந்தால், தமிழைவிட கன்னடம்தான் மூத்த மொழி என்பற்கான வரலாற்று ஆதாரங்களை, இலக்கியச் சான்றுகளை, மொழியறிஞர்களின் ஆய்வு முடிபுகளைத் தந்து அறவழியில் மறுக்க வேண்டும்; ஆக்கப்பூர்வமான வாதங்களை முன்வைக்க வேண்டும். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று சொன்ன கன்னட திரைக்கலைஞர்களின் திரைப்படங்கள் தமிழகத்தில் திரையிடப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன?
ஏற்கனவே, காவிரி நதிநீர் போராட்டத்தின்போது முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், இறுதி மரியாதை செய்தும் கன்னடவெறி அமைப்புகள் அவமதித்தபோது எவ்வித எதிர்வினையும் ஆற்றாது தமிழக அரசு அமைதியாக கடந்துபோனதைப்போல, தற்போதும் கடந்து போகக்கூடாது.
உண்மையறியாது போராடும் கன்னட இனவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, தமிழ்த்திரையின் பெருமைமிக்க கலை அடையாளம் கமல்ஹாசனுக்கு வரலாறு தெரியவில்லை என்று அவமதிக்கின்றார். ஆனால், அதற்கு பதிலடி தரவேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? கள்ள அமைதியை கடைபிடிப்பதன் மூலம் கமல்ஹாசனை மட்டுமல்ல, அன்னை தமிழையே அவமதிக்கின்றீர்கள்.
எனவே, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேசி, போராடும் கன்னட அமைப்புகளைக் கட்டுப்படுத்தி தேவையற்ற பதற்றத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை : அன்புமணி பேட்டி
வெள்ளி 30, மே 2025 5:29:02 PM (IST)

போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3பேர் காயம்: வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 30, மே 2025 4:12:41 PM (IST)

வைகோவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்கும் என நம்பினோம்: துரை வைகோ வருத்தம்
வெள்ளி 30, மே 2025 3:39:46 PM (IST)

நான் தவறு செய்யவில்லை; மன்னிப்புக் கேட்கப் போவதும் இல்லை: கமல் திட்டவட்டம்!
வெள்ளி 30, மே 2025 3:26:43 PM (IST)

காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
வெள்ளி 30, மே 2025 12:28:08 PM (IST)

மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்றவர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 30, மே 2025 11:51:07 AM (IST)
