» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் இளம்பெண் பாலியல் புகார் : வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்!
வியாழன் 29, மே 2025 3:41:33 PM (IST)
தூத்துக்குடியில் இளம்பெண்ணுக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலியல் தொந்தரவு மற்றும் மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே தென்மலை தென்குமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த அவர் மீண்டும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தாராம். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையம், ஊரக துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் காவல்துறை விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண், மாநிலம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்தார். இதனிடையே தென்மலை தென்குமரனை இளம்பெண் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தென்மலை தென்குமரன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இளம்பெண் மீது பிசிஆர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், இளம்பெண் புகார் தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விசாரணையில் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை : அன்புமணி பேட்டி
வெள்ளி 30, மே 2025 5:29:02 PM (IST)

போதை ஆசாமி ஓட்டி வந்த கார் மோதி 3பேர் காயம்: வாகனங்கள் சேதம் - தூத்துக்குடியில் பரபரப்பு!
வெள்ளி 30, மே 2025 4:12:41 PM (IST)

வைகோவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்கும் என நம்பினோம்: துரை வைகோ வருத்தம்
வெள்ளி 30, மே 2025 3:39:46 PM (IST)

நான் தவறு செய்யவில்லை; மன்னிப்புக் கேட்கப் போவதும் இல்லை: கமல் திட்டவட்டம்!
வெள்ளி 30, மே 2025 3:26:43 PM (IST)

காசுக்காக ஓட்டுப்போடும் கலாசாரம் முடிவுக்கு வர வேண்டும்: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
வெள்ளி 30, மே 2025 12:28:08 PM (IST)

மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்றவர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 30, மே 2025 11:51:07 AM (IST)
