» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் வரும் தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி: நயினாா் நாகேந்திரன் நம்பிக்கை
செவ்வாய் 3, ஜூன் 2025 12:40:15 PM (IST)
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

அவா் யாா் என்பதையும் தெரிவித்து அவருக்கும் தண்டனை வாங்கித் தந்துவிட்டு முதல்வா் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களால் திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறது. இது தவிர சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்டவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே தமிழகத்தில் வரும் தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு யானை தேவையாக உள்ளது. உத்தரகண்ட் மாநில அரசு யானை தருவதற்கு தயாராக இருந்தும், தமிழக அரசு அதனை பெற்றுத் தர மறுக்கிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் தமிழகம் முழுவதும் பாஜகவை அமைப்புரீதியாக வலுப்படுத்தி வருகிறோம். இந்தப் பணி நிறைவடைந்ததும் தோ்தலுக்கான வேலையை தொடங்குவோம்.
பாமகவில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இதனால் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பாஜகவைப் பொருத்தவரை திமுகவை எதிா்ப்பதற்காக எல்லோரும் ஓரணியில் இணைய வேண்டும். தவெக தலைவா் விஜய்க்கும் ஏற்கனவே நான் அழைப்பு விடுத்துள்ளேன். தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் உள்ளதால் காலச்சூழ்நிலை மாறும் என்றாா் அவா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாணவர்கள் இருவரை காப்பாற்றி உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் நிதியுதவி!
வியாழன் 5, ஜூன் 2025 11:50:04 AM (IST)

பெங்களூரு உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி, கர்நாடக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
வியாழன் 5, ஜூன் 2025 11:46:53 AM (IST)

நெஞ்சை பதற வைக்கும் பெங்களூரு துயர சம்பவம்: 11பேர் மரணத்திற்கு கமல்ஹாசன் இரங்கல்!
வியாழன் 5, ஜூன் 2025 11:16:49 AM (IST)

திமுக ஆட்சியில் ஆசிரிய பெருமக்களுக்கு, ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை: அண்ணாமலை
வியாழன் 5, ஜூன் 2025 11:01:31 AM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு: இன்று முதல் அமல்!
வியாழன் 5, ஜூன் 2025 10:35:47 AM (IST)

பெங்களூருவில் கூட்டநெரிசலில் 5 தமிழர்கள் உட்பட 11பேர் பலி : எடப்பாடி பழனிசாமி இரங்கல்
வியாழன் 5, ஜூன் 2025 10:32:23 AM (IST)
