» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!

செவ்வாய் 15, ஜூலை 2025 10:33:29 AM (IST)

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 

கன்னியாகுமரி மாவட்டம், செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் கங்கை தெருவை சேர்ந்தவர் மகேஷ் என்ற மகேஷ்வரன் (20), தொழிலாளி. இவருக்கும், சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 13-1-2020 அன்று சிறுமியை, மகேஷ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்துக்கு கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். 

பின்னர் அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து சிறுமியை பலாத்காரம் செய்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. 

வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், அப்போது குற்றம் சாட்டப்பட்ட மகேசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory