» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆணவப் படுகொலை : கவின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஞாயிறு 3, ஆகஸ்ட் 2025 2:56:05 PM (IST)



ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் தந்தைக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (27). ஐ.டி. ஊழியர். கவின் கடந்த 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன்-கிருஷ்ணகுமாரியின் மகன் சுர்ஜித் (24) என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அவர்களும் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் கவினின் தந்தை சந்திரசேகரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கவின் தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கவின் தந்தை சந்திர சேகருடன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory