» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு அதிகரிப்பு : திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி வழக்கு!

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 4:57:23 PM (IST)



தமிழ்நாட்டில் கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியுள்ள 'கிங்டம்' திரைப்படத்தில் தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ புரொடெக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ் ஈழ பிரச்சினை குறித்த உணர்வுகளை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கப்படவில்லை. படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவின் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது நாளை விசாரணை நடக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory