» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

டிஎன்பிஎஸ்சி மூலம் 2,250 பணியிடங்கள் தேர்வு : தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்புதல்

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 11:46:06 AM (IST)

டிஎன்​பிஎஸ்சி மூல​மாக, 400 உதவி பொறி​யாளர்​கள், 1,850 கள உதவி​யாளர்​களை தேர்வு செய்ய தமிழ்நாடு மின்சார வாரி​யம் ஒப்​புதல் அளித்​துள்​ளது.

மின் வாரி​யத்​தில் உதவி பொறி​யாளர், கள உதவி​யாளர், கேங்​மேன், லைன்​மேன் போன்ற பணி​யிடங்​களை உடனடி​யாக நிரப்ப வேண்​டும் என தொழிற்சங்கங்கள் வலி​யுறுத்​துகின்​றன. மின் வாரிய பணி​யாளர்​கள் வாரி​யத்​தின் வாயி​லாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மூல​மாக தேர்வு செய்​யப்​படு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கடந்த 2023-ம் ஆண்டு முதல் உதவிப் பொறி​யாளர் உட்பட ஒரு சில பணி​யிடங்​களை நிரப்ப டிஎன்​பிஎஸ்சி மூலம் தேர்​வு​கள் நடை​பெற்று வரு​கிறது. கடந்த ஆண்டு நடை​பெற்ற தேர்​வில் தேர்ச்சி பெற்ற 258 உதவி பொறியாளர்​கள் விரை​வில் பணி​யில் சேர்க்​கப்பட உள்​ளனர்.

இந்​நிலை​யில். தற்​போது 400 உதவி பொறி​யாளர்​கள் மற்​றும் 1850 கள உதவி​யாளர்​களை டிஎன்​பிஎஸ்சி மூல​மாக தேர்வு செய்ய மின் வாரி​யம் ஒப்​புதல் ஒப்​புதல் வழங்​கி​யுள்​ளது. டிஎன்​பிஎஸ்​சி​யின் ஒருங்​கிணைந்த தொழில்​நுட்ப சேவை​கள் தேர்​வு​கள் மூல​மாக இந்த பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வுள்​ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory